ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை எதிர்நோக்கும் தோழர்களுக்கு விடுவிப்பு கேட்பது இரக்கதினாலல்ல. குற்றத்தில் அவர்களுக்கு தொடர்பு இல்லாததும் சித்திரவதை செய்து தவறான வழிமுறைகளில் காலாவதியான தடா சட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாக்குமூலமே. கேட்பது மன்னிப்பல்ல மறுக்கப்பட்ட நீதியே.
நாகரீக சமுதாயத்தில் மரண தண்டனை என்பது ஒழிக்கப்படவேண்டும் என்றால் அதே நாகரீக சமுதாயத்தில் திட்டமிட்டு கொடூர கொலை செய்யும் விளைவுகள் என்னவென்று அறிந்து அப்பாவிகளை கொலை செய்வோருக்கு என்ன தண்டனை வழங்குவது
1. ஈவு இரக்கமின்றி இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர்களின் சகோதரருக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி என்ன தண்டனை வாங்கி தரபோகிறோம்?
2. பல்லாயிரம் உயிர்களை திட்டமிட்டு படுகொலை செய்த நரேந்திர மோடிக்கு என்ன தண்டனை
3. தூக்கு தண்டனையை கண்டிக்கும் நாம் அதே வேளையில் போலி என்கவுண்டர்களை தவிர்த்து காவல் துறை செய்யும் பற்பல என்கவுண்டர்களை ஏன் ஆதரிக்கிறோம்? இங்கே ஆதரவு என்பது முறையாக செய்யப்படாத எதிர்ப்பே ஆகும்.
மரண தண்டனை வேண்டாம் என்று போராடுவது வேறு. அதே வேளையில் தூக்கு கயிற்றின் முன் நிற்கும் அப்பாவிகளை விடுவிப்பது என்பது வேறு.ராஜீவ் கொலையில் உண்மை இன்னமும் முழுதாகவும் சரியாகவும் துப்பு துலக்காமல் பல் நோக்கு விசாரணையை துவக்கவே இல்லை சி.பி.ஐ.
யாரையோ காப்பாற்றுவதற்கு இவர்களை பலி கொடுக்க வேண்டுமா
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயர் எந்த விதமான தண்டனைக்கு உரியவனோ அது போலவே ஈழ தமிழர்கள் அழிவு நிலைக்கு ராஜீவ் காந்திக்கும் அதே பொருந்தும்.
டயரை சுட்டு கொன்ற உத்தம் சிங் போல ராஜீவ் காந்தி மரணத்துக்கு ஈழ தமிழர்கள் யார் காரணம் என்றாலும் அவர்களும் தியாகிகளே. இந்தியா வந்து ஒரு நாட்டின் முன்னால் பிரதமரை கொள்வது நியாயமா என்று கேட்பது போன்றே ஒரு பிரதமராக அமைதி படை என்ற பெயரில் அட்டுழிய படை அனுப்புவதும் நியாயமா என்ற கேள்வியும்.
மேலும் விபரங்களுக்கு, கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=2009&Itemid=139

//ஈவு இரக்கமின்றி இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர்களின் சகோதரருக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி என்ன தண்டனை வாங்கி தரபோகிறோம்?
ReplyDelete//
அவருக்கு தூக்கு தண்டனை அளித்தால் வேண்டாம் என சொல்லுவிர்களா ?
இன்று என் வலையில்
ReplyDeleteஅஜித் : THE REAL HERO