தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்கு கூட லாயக்காக மாட்டார்கள் - இப்படி "துக்ளக் சோ" சொல்லியிருக்கிறார்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் உள்ளபடியே தமிழ் சீர்திருத்தத்திற்கு உதவி மொழியை செம்மைப்படுத்தினார். தமிழ் நீசமொழி என்று சொன்னவர்கள் தமிழ் கருவறைக்கு வெளியே தான் வைத்துள்ளார்கள். துக்ளக் தமிழில் தானே வருகிறது, தமிழால் வயிறு வளர்க்கும் சோ தமிழ் மூலம் படிப்பவர்களுக்கு தன் ஏட்டில் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் வேலைவாய்ப்பிற்கு செய்கிறாரா.?
எப்பாடு பட்டேனும் தமிழை அழிக்க துடிக்கும் சிலரோடு
சேர்ந்து மற்றவர்கள் குழம்பிக்கொள்வதால் வந்த பிரச்சனை இது.
தாய்மொழிக்கல்வியையும் தொழில்கல்வியையும் குழப்புவதால் வந்த பிரச்சனை இது. தமிழில் கல்வி கற்க வேண்டும் என்பது தாய்மொழியில் கல்வி கற்றால் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்பதோடு சிந்தனை ஆற்றல் பெருகும். அனைத்து வகையான தொழில்கல்வியையும் தமிழில் படிக்கவேண்டுமென்பது தமிழ் வளர்ச்சியோடு அந்த மொழி படிக்கும் மாணவர்களின் அறிவு திறனுக்கே. தமிழில் படிப்பதால் வேலை தரவேண்டும் என்பது வாதமல்ல. இதற்கு முதல் படி அனைத்து தொழில்நுட்பப் பயிலக புத்தகங்களையும் தமிழ் படுத்த வேண்டும்
கணிணி உள்ளீடுகளில் அதிக எழுத்துரு
கொண்டதால் நாம் எவ்வளவு இன்னல்களை எதிர்நோக்குகிறோம். இன்னும் கொஞ்ச நாள் பெரியார் இருந்திருந்தால் உ வரிசை உயிர்மெய் எழுத்தையும் (க்+உ=கு,ங்+உ=ஙு,ச்+உ=சு) ஊ வரிசை உயிர்மெய்எழுத்தையும் (க்+ஊ=கூ,ங்+ஊ=ஙூ,ச்+ஊ=சூ) காலத்திற்கேற்ப மாற்றம் செய்திருப்பார். அவரின் பணியை தொடராததால் வந்தவை இது.
மாற்றியிருந்தால் இன்னும் எளிதாக கணணியில் உபயோகப்படுத்த பட்டிருக்கும். அதற்காக தமிழின்
புனிதம் கெட்டுவிடும் என்று எண்ணத்தேவையில்லை. தோன்றிய காலம் தொட்டு தமிழ் மாற்றம்
பெற்றே வந்திருக்கிறது. வளர்ச்சிக்கு மாற்றம் தேவையே

No comments:
Post a Comment