Thursday, March 23, 2017

சொற்பேச்சு கேளாண்மை

மகனின்
சொற்பேச்சுகேளாண்மை
கண்டிப்பில்
பேசாவன்முறையை 
கையிலெடுத்ததால்
பின்னே அவனால்
முடிந்தளவு
கெஞ்சி அழுதும்
இரக்கமில்லாமல்
செவிசாய்க்காத காரணத்தால்
நீர்வற்றி
பொருமிகொண்டே
படுத்துறங்கி போனானோ.
என்ன பாடுபட்டிருக்குமோ
பிள்ளை மனம்
தாமதமாய் சமாதானப்படுத்த
சென்றதால்...
எத்தனை நீரருந்தியும்
கனமாய் உள்ளிறங்கவில்லை.
உறக்கமில்லாமல்
இப்பொழுது
நான்
#மகனதிகாரம்

கால் பிடிப்பு

அன்றொரு நாள் சற்று நீண்டதூரம்
நடந்தே சென்றுவந்ததால்
இரவில்
"அப்பா கால் வலிக்குதப்பா"
என்றதற்கு 
கால்களிரண்டையும்
பிடித்துவிட்டேன்.
 உறங்கி போனான்
பிறிதொரு நாளில் இதே போன்று
வலித்ததாய் சொன்னான்
கால்பந்து பயிற்சியால் வலி
இருக்குமென்று
எண்ணிக்கொண்டு ஒன்றும்
சொல்லவில்லை நான்
தொடர்ச்சியாய் கேட்பதும்
நானும் சிறுபிள்ளையென்று
பிடித்துவிடுவதும்
நாள்தோறும் நிகழ்வாயிற்று
சிலநாட்களில்
ஏதேனும் காரணம் சொல்லியும்
ஏமாற்றிவிடுகிறேன்
கணுக்கால் முன்னாடியாம்
முட்டி பின்னாடியாம்
சந்தனம் பூசச்சொல்வது போல
முன்னாடி பின்னாடி
அங்கே இங்கே என்று
அலைகழிப்பதுவும் நடக்கும்
சிலநாட்களில்
இன்று கைவலிப்பதாய் நானொரு
பாசாங்கு. விட்டுவிடுவானென்ற
நம்பிக்கையில். என்
கைபிடித்து வாயருகே
கொண்டுசென்று ஊதி ஊதி
பிறகு கேட்கிறான்
"வலி போயிடுச்சா" என்று
பாசத்தில் நெகிழ்ந்து
இம்மென்றவுடன்
சொன்னான்
"சரி இப்ப காலை பிடிச்சி விடு"
#மகனதிகாரம்

Monday, November 24, 2014

கணக்கு பாடம்

அப்பா, இங்க பாத்தியா, மிஸ் வெரி குட் போட்டுருக்காங்க
சூப்பருமா, நீயே போட்டியா
ஆமாம்பா
டாய், பொய் சொல்லாத, உனக்கு தான் மேக்ஸ் சரியா வராதே
இல்லப்பா, பக்கத்து பையன பார்த்து எழுதினேன்

முகநூலில் 25.06.2014

பெரியார் 136ம் பிறந்தநாள்

சுவரொட்டி

அக்கா தம்பி

அப்பா, நம்ம தம்பிய யாருகிட்டவாவது கொடுத்துடலாம்பா
ஏன்மா
நீ ஆபீஸ்ல இருந்த வந்தவுடன் குடுகுடுன்னு உன்கிட்ட ஓடிவந்துடுறான்பா
அதனால என்னம்மா பிரச்சனை
நீ அவன்கிட்டயே பேசுறல்ல
நான் உங்கிட்ட தானேம்மா அதிகமா பேசுறேன், பாவம் தானே அவன்
அவன் ஆனா அதிகமா பேசவிட மாட்டேன்றானேப்பா
ஙே..


முகநூலில் 6.11.14

Sunday, November 10, 2013

டாக்காவில தமிழ் வகுப்பு

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 

என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் வரிகளை மனதில் நிறுத்தி நமது உயிரான, அமுதான தமிழை அடுத்த தலைமுறைக்கு எழுத படிக்க சொல்லித்தர வங்கதேசத்தில் எடுத்த முயற்சிக்கு இந்தோனிசியா தமிழ்ச்சங்கத்தின் மூலம் தோழர் Vivekanandhan Ramanujamஅவர்கள் அங்கே கற்பிக்கப்படும் தங்களின் பாடத்திட்டத்தினை மகிழ்வுடன் தந்தளித்தார்கள். மேலும் ஹாங்காங் தமிழ்பண்பாட்டுக் கழகத்திலிருந்து தோழர் Ram Hkg அவர்களின் குறைந்த கால அவகாசத்தில் சிங்கப்பூர் பாடதிட்ட நூல்களையும் தந்து உதவினார்கள். இப்பணியில் மகிழ்ச்சியோடு தன்னார்வத்தோடு இன்றிலிருந்து ஈடுபடும் ஆசிரியர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

முத்தம்

முத்தம் கேட்டால்
கணணியில் தலையை 
முட்டிகொண்டு தரும் மகள்
இப்பொழுதெல்லாம் திரை இடிக்குதப்பா,
நீ இங்கே வாவென்கிறாள்...
கல்வி எப்படியெல்லாம்
அறிவை கெடுத்து வைத்திருக்கிறது